இந்த சூழலில் தனது தேர்தல் செலவு விவரங்களை துண்டறிக்கைகளாக வெளியிட்டிருக்கிறார். இதனை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் ஒட்டியுள்ளார். தனது ஊரில் உள்ள மக்களிடமும் துண்டறிக்கைகளை வழங்கி வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் விசித்திரமாக பார்க்கின்றனர். அந்த துண்டறிக்கையில், வீட்டு வரி ரூ.44, பிரமாண பத்திரம் நோட்டரி வழக்கறிஞர் செலவு ரூ.500, வேட்புமனு தாக்கல் கட்டணம் ரூ.300, நோட்டீஸ் செலவு ரூ.10,200, மைதா மாவு ரூ.100, பூஜை பொருள் ரூ.300, அர்ச்சனை சீட்டு ரூ.5, உண்டியலுக்கு ரூ.11, வடை ரூ.10, தேநீர் ரூ.28 என மொத்தம் ரூ.18,481 செலவானதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் தன்னை தோல்வியடையச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியும், அன்பும் எனப் பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக துரைகுணா கூறுகையில் ஓட்டுக்கு பணம் என்ற விஷயத்தில் மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.