நாடாளுமன்ற புலனாய்வு குழு, ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த விசாரணையை நடத்தி வந்தது. இந்த விசாரணையின்போது, அமெரிக்க தூதர்கள் 2 பேர் டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற புலனாய்வுக் குழு 300 பக்கங்கள் கொண்ட தமது விசாரணை அறிக்கையை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்தது.
அதில், "தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மீது விசாரணை நடத்த உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க, அதிபர் டிரம்ப் தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள உள்ளன.
மேலும், பதவி நீக்க விசாரணையை தடுக்க டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், அதிபர் ட்ரம்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவிற்கு சபாநாயகர் நான்சி பெலோசி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.