அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது
டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இன்று (வியாழக்கிழமை ) அதிரடியாகஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
இதை மனதில் கொண்டு, ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், உக்ரைனில் அவரும், அவரது மகனும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இல்லாவிட்டால் உக்ரைனுக்கு தந்து வரும் பயங்கரவாத ஒழிப்பு நிதியை நிறுத்திவிடுவோம் என அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.